விசைப்படகில் வாக்காளர் தின விழிப்புணர்வு பயணம்

நாகையில் விசைப்படகில் பயணித்து வாக்காளர் தின விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2023-01-25 18:45 GMT

நாகையில் விசைப்படகில் பயணித்து வாக்காளர் தின விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வாக்காளர் தினம்

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி தேர்தல் ஆணையம் சார்பில் நாகை மாவட்டம் முழுவதும் வாக்குரிமையின் அவசியத்தை வலியுறுத்தி பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்களும் 100 சதவீதம் தங்களது வாக்குரிமையை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக நேற்று நாகை துறைமுகத்தில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. நிகழ்ச்சிக்கு உதவி கலெக்டர் பானோத்ம் ருகேந்தர்லால் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் கப்பல் படை அலுவலகத்தில் இருந்து மீன் பிடித்துறைமுகம் வரை கடலில் விசைப்படகில் பயணித்தவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது தேர்தலில் மீனவர்கள் தவறாமல் தங்கள் வாக்குகளை செலுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

துண்டு பிரசுரம்

இதை தொடர்ந்து நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்த அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், நாகூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்களிடம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

இதில் இந்திய கடற்படை, தமிழக மீன்வளத்துறை மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்