தவணை தவறிய தொகைக்கான வட்டி தள்ளுபடி

கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் தவணை தவறிய தொகைக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படுவதாக கடலூர் மண்டல கூட்டுறவு சங்க துணைபதிவாளர் (வீட்டுவசதி சங்கம்) சிவராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2023-03-25 18:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் கடன் பெற்று தவணை செலுத்த தவறிய கடன்தாரர்களுக்காக ஒரு முறை கடன் தீர்வு திட்டத்தினை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடன்தாரர்கள் செலுத்த வேண்டிய அசல் தொகை மற்றும் வட்டி செலுத்தும்பட்சத்தில் அவர்கள் செலுத்த வேண்டிய தவணை தவறிய வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி சலுகை காலம் 2023 மார்ச் 3-ந் தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும். அதன் பிறகு இத்திட்டம் செயல்பாட்டில் இருக்காது. எனவே தவணை தொகை செலுத்த தவறிய அனைத்து கடன்தாரர்களும் இச்சலுகையை பயன்படுத்தி அசல் மற்றும் வட்டியினை மட்டும் செலுத்தி பயன்பெறலாம். இச்சலுகை தொடர்பான விவரங்களுக்கு தொடர்புடைய அந்தந்த கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்