மானாமதுரை பஸ் நிலையத்தில் குடிநீர் தட்டுப்பாடு
மானாமதுரை பஸ் நிலையத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.;
மானாமதுரை
மானாமதுரை நகர் வழியாக தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா தொடங்க உள்ள நிலையில் இது மேலும் அதிகரிக்க உள்ளது.
தாயமங்கலத்திற்கு மானாமதுரை வழியாக சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அனைத்து பஸ்களும் மானாமதுரை பஸ் நிலையம் வந்து செல்கின்றன.
தினசரி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்லும் இடத்தில் குடிக்க தண்ணீர் இல்லை, நகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் குடிநீர் நிரப்பப்படுவதில்லை என பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் பயணிகள் காசு கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்துகின்றனர். தற்போது கோடை காலம் என்பதால் உடனடியாக பஸ் நிலையத்தில் ஆங்காங்கே தண்ணீர் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.