157 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

கமுதி அருகே 157 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

Update: 2022-12-16 18:45 GMT

கமுதி,

கமுதி அருகே 157 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

கமுதி அருகே நீராவி கிராமத்தில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கி பேசினார். 96 பேரிடம் இருந்து மனுக்கள் வாங்கப்பட்டன.

பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையும், 23 பயனாளிகளுக்கு முதியோர் உதவி தொகை, 18 பயனாளிகளுக்கு இந்திரா காந்தி தேசிய விதவை உதவித்தொகையும், 50 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் வீட்டுமனை, ஒப்படைக்கும் 11 பயனாளிகளுக்கு முழு புலன் பட்டா மாறுதலும், 8 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாறுதல்களும் உள்ளிட்ட 157 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் பயிற்சி நாராயண சர்மா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை கலெக்டர் கந்தசாமி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்செல்வி, தாசில்தார் சிக்கந்தர் பவிதா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வாசுதேவன், நீராவி ஊராட்சி மன்ற தலைவர் வால்ராஜ், துணை ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி. நாகராஜன், ஊராட்சி ஆணையாளர்கள் மணிமேகலை, ராஜகோபால் மண்டல துணை தாசில்தார் முத்துராமலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்