ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கல்வராயன்மலையில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கினர்;

Update:2022-08-07 22:28 IST

கள்ளக்குறிச்சி

கல்வராயன்மலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் கிளைகள் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் விக்ரம் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பிரகாஷ் முன்னிலை வகித்தார்.  தொண்டரணி தலைவர் ராமு வரவேற்றார். விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவரும், விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளருமான பரணிபாலாஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இன்னாடு, தரிசுகாடு ஆகிய கிராமங்களில் விஜய் மக்கள் இயக்க கிளைகளை திறந்து வைத்து பேசினார்.

இதில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ரூ.2 லட்சம் மதிப்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகம் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, சேலை, அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஒன்றிய துணை செயலாளர் ராஜா, ஒன்றிய பொருளாளர் அய்யனார், சங்கராபுரம் வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் செல்வம், கள்ளக்குறிச்சி ஒன்றிய தொண்டரணி செயலாளர் ஜே.சி.பி. பிரகாஷ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்