பலத்த மழையின் காரணமாக கிணறுகள் நிரம்பின

தளி, அமராவதி பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக கிணறுகள் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2022-12-06 18:02 GMT

தளி, அமராவதி பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக கிணறுகள் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.தளி, அமராவதி பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக கிணறுகள் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கிணறுகள்

உடுமலை, தளி, அமராவதி சுற்றுவட்டாரப் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாகும். சாகுபடி பணிகளுக்கு திருமூர்த்தி, அமராவதி அணைகள், கிணறு, ஆழ்குழாய்கிணறுகள், பருவமழை கை கொடுத்து வருகிறது. அதை ஆதாரமாக கொண்டு நீண்டகால பயிர்கள், காய்கறிகள், தானியங்கள், மானாவாரி சாகுபடி நடைபெற்று வருகிறது. மழைக்காலங்களில் ஏற்படுகின்ற நீர்வரத்து நீராதாரங்களில் தேங்குவதால் நிலத்தடி நீர்இருப்பும் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாய பணிகள் தடையில்லாமல் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது.

ஆனாலும் வறட்சி காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகி விடுவதும் வாடிக்கையாக உள்ளது.

இந்த சூழலில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை ஓரளவுக்கு கைகொடுத்து உதவியது.அதைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழையும் தீவிரமடைந்து நல்ல முறையில் பெய்து வருகிறது.இதனால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி வருகிறது.அத்துடன் நீர்வழித்தடங்களில் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளதால் அதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் தேங்கி வழிந்த வண்ணம் உள்ளது.

நீர்மட்டம்

இதனால் சுற்றுப்பகுதியில் உள்ள கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர்இருப்பு கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரு சில திறந்தவெளி கிணறுகள் நிலமட்டத்திற்கு நீர் இருப்பை பெற்று உள்ளது.மேலும் தொடர் மழையின் காரணமாக சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என்பதால் கூடுதல் விளைச்சலை இயற்ற முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்