சென்னையில் மின்சார விநியோகம் சீராவது எப்போது?

தண்ணீர் முழுமையாக இறங்கிய பகுதிகளில் 2 மணி நேரத்தில் மின்சாரம் வழங்கப்படுகிறது.

Update: 2023-12-05 11:10 GMT

சென்னை,

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்கு மிக்ஜம் எனப் பெயரிடப்பட்டது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவில் இருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது.

இந்தநிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் பல இடங்களில் துண்டிக்கப்பட்டது. சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. தற்பொழுது மழை நீர் தேங்கும் இடங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் மின்சார வாரியம் சார்பில் மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மின்சாரத்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

▪️ 'மிக்ஜம்' புயலால் பெய்த அதி கனமழையில் சென்னை முழுவதும் மழை நீர் தேங்கி உள்ளது.

▪️ 85% இடங்களில் மின்சார விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

▪️ தண்ணீர் முழுமையாக இறங்கிய பகுதிகளில் 2 மணி நேரத்தில் மின்சாரம் வழங்கப்படுகிறது.

▪️ நேற்று பகல் 12 மணிக்கு 112 மெகாவாட்தான் பயன்பாடு இருந்தது. ஆனால், தற்போது 1,200 மெகாவாட் மின்சாரம் பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கிறது.

▪️நேற்றைய மின் நுகர்வை விட இன்று 10 மடங்கு பயன்பாடு அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்