பரவலாக மழை

கீழ்வேளூர் பகுதியில் பரவலாக மழை பெய்தது.;

Update:2022-08-18 22:43 IST

சிக்கல்:

கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை 3 மணி முதல் கீழ்வேளூர், தேவூர், காக்கழனி, இரட்டைமதகடி வெண்மணி, கூத்தூர், வடக்காலத்தூர், பட்டமங்கலம் ஆவராணி, புதுச்சேரி ஆழியூர், சிக்கல், பொரவச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை இரவு 6 மணி வரை நீடித்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்கள் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழை வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.குறுவை சாகுபடியில் நேரடி நெல் விதைப்பு செய்துள்ள விவசாயிகள் இந்த மழை தகுந்த நேரத்தில் பெய்துள்ளதாக தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்