சங்கராபுரத்தில் பரவலாக மழை

சங்கராபுரத்தில் பரவலாக மழை பெய்தது.;

Update:2023-07-25 00:06 IST

சங்கராபுரம், 

சங்கராபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதன் பின்னர் மாலை 5.30 மணிக்கு வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. அதனை தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மழையில் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது. மேலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான இடங்களில் தேங்கி நின்றது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் பெய்தது. இதேபோல் சங்கராபுரத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்