தலைவாசல் அருகே கணவன் வீட்டு முன்பு மனைவி தர்ணா

தலைவாசல் அருகே கணவன் வீட்டு முன்பு மனைவி தர்ணா போராட்டம் நடத்தினார்.;

Update:2023-09-22 02:19 IST

தலைவாசல்:

தலைவாசல் அருகே ஆறகளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் (வயது42). இவருக்கும், ஆத்தூரை சேர்ந்த அபிராமி (28) என்பவருக்கும் திருமணம் ஆனது. இவர்கள் இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதற்கிடையே அபிராமி, தன்னுடைய கணவர் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த தலைவாசல் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் அபிராமியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் போது கணவர் இன்னொரு திருமணம் செய்து கொண்டது தவறு என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசாரிடம் அபிராமி கூறினார். அதற்கு போலீசார் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது கோர்ட்டு கூறியபடி நடந்து கொள்ள ேவண்டும் என்று கூறி போலீசார் அபிராமியை அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்