விபத்தில் இறந்த கணவரின் கண்களை தானம் செய்த மனைவி

விபத்தில் இறந்த கணவரின் கண்களை அவரது மனைவி தானம் செய்தார்.;

Update:2023-01-09 00:40 IST

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட முடிகொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 44). இவர் அப்பகுதியில் உணவகம் நடத்தி வந்தார். கடந்த 1-ந் தேதி ரவிச்சந்திரன் முடிகொண்டானில் இருந்து திருமானூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் உடைக்கப்பட்டு கிடந்த பூசணிக்காயால் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் வழுக்கி கீழே விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவிச்சந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து, அவரது மனைவி செல்வி தனது கணவரின் கண்களை தானம் செய்ய முன்வந்தார். இதனைதொடர்ந்து ரவிச்சந்திரனின் கண்களை தானம் செய்வதற்கான ஏற்பாடுகளை டாக்டர்கள் செய்தனர். கணவர் இறந்த நிலையிலும் அவரது கண்களை தானம் செய்த செல்வியின் செயல் கிராம மக்களிடையே நெகிழ்ச்சி அடைய செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்