மாரியம்மன் கோவிலுக்குள் புகுந்த காட்டு யானைகள்

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் மாரியம்மன் கோவிலுக்குள் புகுந்த காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2023-03-02 00:15 IST

வால்பாறை, 

வால்பாறை பகுதியில் தற்போது கடுமையான வறட்சி ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையையொட்டி உள்ள புதுத்தோட்டம் எஸ்டேட் மாரியம்மன் கோவில் வளாகத்திற்குள் 2 காட்டு யானைகள் புகுந்தன. அதனை அந்த வழியாக வாகனங்களில் சென்ற சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வால்பாறை வனச்சரகத்தின் மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு குழுவினர், வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காட்டு யானைகளை அங்கிருந்து வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர். கோவில் வளாகத்திற்குள் காட்டு யானைகள் திடீரென புகுந்ததால், புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வால்பாறை பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூட்டம் கேரள மாநிலம் சாலக்குடி வனப்பகுதிக்கு செல்ல தொடங்கி உள்ளதால், தமிழக-கேரள எல்லையில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்