கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் விற்ற பெண் கைது

நாட்டறம்பள்ளி அருகே கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-17 14:57 GMT

நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெலக்கல்நத்தம் பகுதியில் ஒரு வீட்டில் வெளிமாநில மது பாக்கெட்டுகளை வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. அதன்பேரில் போலிசார் அங்கு சென்று சோதனை செய்தனர். இந்த சோதனையில் நாட்டறம்பள்ளி அடுத்த பையனப்பள்ளி எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த கமல் என்பவரது மனைவி செல்வி (வயது 35) தனது வீட்டில் கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை விற்பனைசெய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து 50 மது பாக்கெட்டுகளை போலிசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்