பாம்பு கடித்து பெண் சாவு
தேசூர் அருகே பாம்பு கடித்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.;
திருவண்ணாமலை மாவட்டம் தேசூரை அடுத்த சாத்தப்பூண்டி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். அவரது மகள் ஈஸ்வரி (வயது 30). இவர், நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது பாம்பு கடித்துள்ளது.
இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக வந்தவாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாய்ராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.