தியாகதுருகம்
தியாகதுருகம் அருகே மடம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சூர்ய குமார்(வயது 37). இவரது மனைவி சுகன்யா(32). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று நாற்று நடும் வேலைக்காக புதுச்சேரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சுகன்யா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சூர்யகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணாததால் இது குறித்து வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சுகன்யாவை தேடி வருகிறார்கள்.