பஞ்சாயத்து அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

களக்காடு அருகே பஞ்சாயத்து அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.;

Update:2023-07-22 02:39 IST

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கள்ளிகுளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்களுக்கு தினசரி ரூ.250 சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக 230 ரூபாயாக சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பளத்தை உயர்த்தி வழங்கக்கோரி நேற்று 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கள்ளிகுளம் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்