கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த பெண்கள்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் விடுபட்ட தங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்று கூறி ஏராளமான பெண்கள் மனு கொடுத்தனர்.

Update: 2023-10-16 18:47 GMT

ராமநாதபுரம்,

தேவிபட்டினம் அருகே உள்ள மாதவனூர் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு திரளாக வந்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் நாங்கள் தகுதியுடையவர்களாக இருப்பதால் விண்ணப்பித்திருந்தோம். எங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அரசின் அறிவுரைப்படி மனுசெய்தோம். இந்த மனு தற்போது வரை பரிசீலனை நிலையில் உள்ளது என்றே வருகிறது.

ஏழை, எளியவர்களாகிய நாங்கள் 100 நாள் வேலைக்கு சென்று பிழைத்து வரும் நிலையில் மகளிர் உரிமை தொகை கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறோம். எனவே உடனடியாக எங்கள் மனுவை பரிசீலனை செய்து மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்