பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா: பா.ஜ.க.வின் ஏமாற்று அரசியலுக்கான எடுத்துக்காட்டு - ப.சிதம்பரம் தாக்கு

பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா பா.ஜ.க.வின் ஏமாற்று அரசியலுக்கான எடுத்துக்காட்டு என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-19 18:26 GMT

கோப்புப்படம்

சென்னை,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், " 

மகளிருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மசோதா, பா.ஜ.க.வின் ஏமாற்று அரசியலுக்கான சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. அந்த மசோதாவை, நாரி சக்தி கேலிக்கூத்து மசோதா என்றுதான் அழைக்க வேண்டும்.

அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை காத்திருக்கும்படி இந்திய பெண்களை அந்த மசோதா ஏளனம் செய்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்த பின்பு, தொகுதி மறுவரை முடியும் வரை மேலும் காத்திருக்கும்படி பெண்களை கூடுதலாக கிண்டல் செய்கிறது. இந்தியப் பெண்கள் அனைவருமே இதற்காக 9.3.2010 முதல் காத்திருப்பதற்கான காரணத்தை மத்திய அரசு விளக்கி இருக்க வேண்டும். அதன் பிறகு அவர்களை காலவரையறையின்றி காத்திருக்கக் கூறலாம். இது ஒரு மசோதா அல்ல, தேர்தலுக்கான கவர்ச்சி அறிவிப்பாகும்.

இவ்வாறு அதில் பதிவிடப்பட்டிருந்தது. 



Tags:    

மேலும் செய்திகள்