சத்தியமங்கலம் அருகே 71 அடி உயர நவகாளியம்மன் சிலை அமைக்கும் பணி தீவிரம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நவகாளியம்மனுக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டு வருகிறது.;

Update:2022-05-30 04:58 IST

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காராப்பாடி கிராமத்தில் புகழ்பெற்ற நவகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு 71 அடி உயர நவகாளியம்மன் சிலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

சிலை அமைக்கும் பணி மற்றும் கோவில் திருப்பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்