பணம் திருடிய தொழிலாளி கைது

தட்டார்மடம் அருகே பணம் திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-12-11 00:15 IST

தட்டார்மடம்:

கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி, வேதாநகர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் மகன் மைக்கேல் இருதயசெல்வன் (வயது 45). இவர் கொம்மடிக்கோட்டை விசுவாசபுரம் பகுதியில் வீடு எடுத்து தங்கி கட்டிட ஒப்பந்ததாரராக வேலை பார்த்து வருகிறார். இவருடன் கன்னியாகுமரி மாவட்டம் அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்த தங்கராஜ் (55) என்பவரும் தங்கி கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் தங்கராஜ், மைக்கேல் இருதயசெல்வனின் பையில் இருந்த பணத்தை திருடினார். இதுகுறித்து மைக்கேல் இருதயசெல்வன் அளித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெல்சன் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை கைது செய்தார். அவரிடம் இருந்த திருடப்பட்ட ரொக்கப்பணம் 14 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்