பெண் குத்திக்கொலை; குண்டர் சட்டத்தில் தொழிலாளி கைது

பெண்ணை குத்திக்கொன்ற தொழிலாளி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-05-21 22:34 IST

கூடலூர்:

கூடலூர் அருகே கருணாநிதி காலனியை சேர்ந்த தேதீஸ்வரன் மனைவி நந்தினி (வயது 26) என்பவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான முத்துசாமியை (26) போலீசார் கைது செய்தனர். ஆசைக்கு இணங்க மறுத்ததால் நந்தினியை கொலை செய்ததாக முத்துசாமி போலீசில் வாக்குமூலம் அளித்தார்.

இதற்கிடையே முத்துசாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, மாவட்ட கலெக்டர் முரளிதரனுக்கு பரிந்துரை செய்தார். அவரது உத்தரவின்பேரில் முத்துசாமி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்