மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

சேத்துப்பட்டில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;

Update:2023-09-21 22:31 IST

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு பள்ளித்தெருவை சேர்ந்தவர் மணி (வயது 65), கூலி தொழிலாளி. இவருக்கு காஞ்சனா என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி மணி காய்கறிகளை வாங்கிக்கொண்டு சேத்துப்பட்டு 4 வழி சாலையில் நடந்து வந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மணியின் மகள் மதுபாலா சேத்துப்பட்டு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்