கஞ்சா வழக்கில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 138 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.;

Update:2025-12-10 19:33 IST

தூத்துக்குடி தெர்மல்நகர் பகுதியைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் ரீதன் (வயது 21) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் சதீஷ்(24) ஆகிய 2 பேரும், தெர்மல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 11.11.2025 அன்று விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஆவர்.

மேற்சொன்ன 2 வாலிபர்களை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில் இன்று (10.12.2025) தெர்மல் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 138 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்