கடன்-நிதி மோசடி அதிகரித்து வருவதாக திருநெல்வேலி எஸ்.பி. அறிவுறுத்தல்

கடன்-நிதி மோசடி போன்ற மோசடிகள் நடைபெற்றால் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் அல்லது 1930 என்ற டோல் ப்ரீ எண்ணிற்கு அழைத்து உடனடியாக புகார் பதிவு செய்யலாம்.;

Update:2025-12-10 19:28 IST

திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தற்போது மிக தீவிரமாக செயல்பட்டு வரும் LOAN-FINANCE FRAUD (கடன்-நிதி மோசடி) என்ற மோசடி அனைத்து இடங்களிலும் செயல்பட்டு வருகிறது.

மோசடி நடைபெறும் விதம்:

தொலைபேசி மூலம் அறிமுகமில்லாத எண்களிலிருந்து குறுஞ்செய்தி அல்லது அழைப்பு வாயிலாக ஒரு குறிப்பிட்ட பிரபல நிதி (Finance) நிறுவனத்தின் பெயரில் உங்களுக்கு மிக குறைந்த வட்டியில் அதிக தொகை கடனாக (LOAN) கிடைக்கும் எனவும், அதற்கு நீங்கள் Eligible ஆகி இருப்பதாகவும் அதை உடனே பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறுவார்கள்.

அவர்கள் பேச்சை நம்பி கடன் வேண்டும் என்று கூறிவிட்டால் LOAN பணத்தை பெறுவதற்கு முன்னால் சில தொகைகளைச் செலுத்த வேண்டி இருக்கும் என்று கூறி Advance Amount, GST, Tax, Processing Fees, Commission என பல விதமான பெயர்களில் பணத்தை முன்பே பெற்றுக் கொண்டு இந்த அனைத்து முன் தொகையையும் LOAN பணம் பெறும் போது அதனுடன் மொத்தமாக சேர்த்து பெற்றுக்கொள்ளலாம் எனக்கூறி அதிகளவில் பண மோசடி செய்துவருகிறார்கள்.

எனவே உங்களது போனில் இது போன்று வரும் SMS அல்லது தொலைபேசி அழைப்புகளைத் தவிர்க்க வேண்டும். அதில் கூறப்படும் நிதி நிறுவனத்திற்கு நேரில் சென்று இதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இது போன்ற சைபர் கிரைம் நடைபெற்றால் சைபர் கிரைம் இணையதளத்தில் www.cybercrime.gov.in அல்லது 1930 என்ற டோல் ப்ரீ (Toll Free) எண்ணிற்கு அழைத்து உடனடியாக உங்களுடைய புகாரினை பதிவு செய்யுமாறு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்