சிகிச்சை பலனின்றி தொழிலாளி சாவு

சிகிச்சை பலனின்றி தொழிலாளி சாவு;

Update:2023-02-11 00:15 IST

கோத்தகிரி

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சம்யூரி இஸ்லாம்(வயது 40). தொழிலாளி. குன்னூரியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். இவர் சம்பவத்தன்று பில்லிகம்பைக்கு வேலைக்கு செல்ல அரசு பஸ்சில் வந்தார். பில்லிகம்பை நிறுத்தம் அருகே வந்தவுடன், பஸ்சின் படிக்கட்டு பகுதியில் இறங்குவதற்கு தயாராக வந்து நின்றார். அப்போது திடீரென சாலையில் தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர்,கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்