ரெயிலில் அடிபட்டு தொழிலாளி சாவு

ரெயிலில் அடிபட்டு தொழிலாளி இறந்தார்.;

Update:2023-08-01 23:48 IST

காவேரிப்பாக்கம்

ரெயிலில் அடிபட்டு தொழிலாளி இறந்தார்.

பாணாவரம் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் வெங்கடேசன் (வயது 63). விவசாய கூலிதொழிலாளி. இவர் நேற்று காலை பாணாவரத்தில் உள்ள ெரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த ெரயிலில் அடிபட்ட வெங்கடேசன் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து காட்பாடி ெரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ெரயில்வே போலீசார் உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து காட்பாடி ெரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்