சாலை விபத்தில் தொழிலாளி சாவு
வல்லத்தில் சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்;
தஞ்சை அருகே முத்தாண்டிபட்டி, தெற்கு தெருவை சேர்ந்தவர் தொழிலாளி தாமல்தாஸ் (வயது46). தொழிலாளி இவர் நேற்று இரவு தஞ்சையில் இருந்து வல்லத்துக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வல்லம்-திருச்சி சாலையில் தஞ்சை நோக்கி மாதுரான் புதுக்கோட்டை, மேலத்தருவைச் சேர்ந்த அம்பேத் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக இரு மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன. இதில் தாமல் தாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த அம்பேத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் பலியான தாமல்தாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தஞ்சையில் இருந்து வல்லம் வழியாக சென்ற பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.