மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

வேலூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update:2023-06-13 23:52 IST

வேலூரை அடுத்துள்ள மேல்மொணவூர் மோட்டூரை சேர்ந்தவர் நாகப்பன். இவரது மகன் சுரேஷ் (வயது 38), வெல்டிங் தொழிலாளி. இவர், நிலத்தில் உள்ள மின் மோட்டாரை இயக்க சென்றார். அப்போது அவர், மின் ஒயரில் எதிர்பாராதவிதமாக கை வைத்ததாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்