உலக தாய்ப்பால் வாரவிழா விழிப்புணர்வு ஊர்வலம்

உலக தாய்ப்பால் வாரவிழா விழிப்புணர்வு ஊர்வலம்;

Update:2023-08-02 02:30 IST

இந்திய மருத்துவ சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வாரவிழா விழிப்புணர்வு ஊர்வலம் ஈரோட்டில் நேற்று நடந்தது. ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஈரோடு காலிங்கராயன் இல்லத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பெருந்துறைரோடு, கலெக்டர் அலுவலகம் வழியாக சென்று சம்பத்நகரில் உள்ள இந்திய மருத்துவ சங்க கூட்ட அரங்கில் நிறைவு பெற்றது. இதில் நந்தா செவிலியர் கல்லூரி மாணவிகள், கேர் 24 மருத்துவமனையின் செவிலியர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து உலக தாய்ப்பால் வார விழா கருத்தரங்கம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்