உலகளாவிய வலை தின நிகழ்ச்சி

ஊட்டி அரசு கல்லூரியில் உலகளாவிய வலை தின நிகழ்ச்சி நடந்தது.;

Update:2023-08-03 03:30 IST

ஊட்டி

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில், உலகளாவிய வலை தின நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் அருள் அந்தோணி தலைமை தாங்கினார். போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் லட்சுமணன் ஆகியோர் சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிலரங்கத்தை கணினி அறிவியல் துறை மாணவர்களுக்கு நடத்தினர். இதன் மூலம் மாணவ-மாணவிகள் பயனடைந்தனர். சமூக ஆர்வலர் ராஜேஷ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்த தகவல்களை விளக்கமாக எடுத்துரைத்தார். முன்னதாக கணினி அறிவியல் துறைத் தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். முடிவில் மாணவி ஹேமா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்