யாக்ஞவல்க்ய குரு ஜெயந்தி நிகழ்ச்சி

யாக்ஞவல்க்ய குரு ஜெயந்தி நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-11-06 19:18 GMT

நன்செய் புகழூர் அக்ரஹாரத்தில் கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாடகள் 68-ம் வருட ஸ்ரீ யாக்ஞவல்க்ய குரு ஜெயந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மூன்று நாட்களும் பிரம்மஸ்ரீ ரகுராம சாஸ்திரிகள் தலைமையில் சதுர் வேதம் பாராயணம் நடைபெற்றது, சதுர் வேதம் என்றால் நான்கு வேதங்கள் ரிக், யஜூர் சுக்குல யஜுர், கிருஷ்ண யஜுர், சாம அதர்வன வேதங்கள். இதில் மொத்தம் 30 வேத விற்பனர்கள் வேத பாராயணம் செய்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர். முதல் நாள் மகா கணபதி ஹோமமும், இரண்டாம் நாள் சபரி வார வீர சரபேஸ்வரர் ஹோமமும் நடைபெற்றது. இதில் 2 நாட்களும் மாலை உபன்யாசங்கள் நடைபெற்றது. முதல் நாள் திருவாசகம், தேவாரமும், 2-ம் நாள் சத்யபாமா கல்யாணம் மற்றும் ஜாம்பவி கல்யாணம் உபன்யாசம் நடைபெற்றது. 3-ம் நாளான நேற்று காலை சதுர்வேத பாராயணம், ஸஹஸ்ரநாம அர்ச்சனையும், தொடர்ந்து வேத விற்பன்னர்களுக்கு சம்பாவனை அளித்து கவுரவித்த நிகழ்ச்சியும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்