தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 16 சதவீதம் வளர்ச்சி: அமைச்சர் தங்கம் தென்னரசு
அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.;
சென்னை,
சென்னையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 16 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. மராட்டிய மாநிலத்தைக் காட்டிலும் உற்பத்தி துறையில் தமிழகம் முன்னேறியுள்ளது. தமிழக அரசின் சிறப்பான கொள்கைகளுக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி இது.
உற்பத்தித்துறை, கட்டுமானத்துறை, மின்னணு துறை என அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்கை 2030 ஆம் ஆண்டு எட்டுவோம். தமிழ்நாட்டின் பொருளாதாரம் தற்போது சிறப்பான உச்சத்தைத் தொட்டுள்ளது.
முதலீட்டாளர் மாநாடுகள் மூலமாக ரூ.11.40 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை 47 சதவீதம் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.