இளம் பெண் மாயம்

இளம் பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update:2022-12-12 00:41 IST

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே காங்கேயன்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ் (வயது 30), டிரைவர். இவருடைய மனைவி சுகன்யா (20). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் ராஜ் தனது மனைவி மற்றும் குழந்தையை தனது உறவினர் சாந்தி வீட்டில் விட்டுவிட்டு பெங்களூருவுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து, நேற்று முன்தினம் பால் வாங்குவதற்காக வெளியே சென்ற சுகன்யா அதன்பிறகு வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இந்த சம்பவம் குறித்து சாந்தி கொடுத்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்