திருட்டு வழக்கில் வாலிபர் கைது

திருட்டு வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-23 19:08 GMT

லத்தேரி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் லத்தேரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த அணைக்கட்டு பகுதியை சேர்ந்த சம்பத் மகன் சுப்பிரமணி (வயது 21) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை லத்தேரி போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்