சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

பொள்ளாச்சி அருகே 15 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-04-24 00:15 IST

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே 15 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

பாலியல் பலாத்காரம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, தனது படிப்பை நிறுத்திவிட்டு பாட்டி வீட்டில் வசித்து வந்தார். அப்போது அவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த வசந்தகுமார்(22) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இதற்கிடையில் வசந்தகுமார், வீட்டில் தனியாக இருக்கும்போது சிறுமியை ஆசை வார்த்தை கூறி தனது வீட்டுக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் கடந்த 12-ந் தேதி மேட்டுப்பாளையத்துக்கு சிறுமியை கடத்தி சென்று, அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து வசந்தகுமார் திருமணம் செய்ததாக தெரிகிறது.

போக்சோவில் கைது

இதையடுத்து வீட்டுக்கு வந்த சிறுமிக்கு, நேற்று முன்தினம் திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. உடனே உறவினர்கள் அவரை மீட்டு உடுமலையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். ெதாடர்ந்து உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை கர்ப்பிணியாக்கிய வசந்தகுமாைர கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்