தேவர் குருபூஜைக்கு சென்ற இளைஞர்கள் ஆபத்தான முறையில் பயணம் - மானாமதுரையில் பரபரப்பு

தேவர் குருபூஜைக்கு சென்ற இளைஞர்கள் வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-10-30 11:28 GMT

மானாமதுரை,

தேவர் குருபூஜைக்கு சென்ற இளைஞர்கள் வாகனத்தின் மேற்கூரை மீது நின்று கொண்டும், தொங்கிக் கொண்டும் மொபைலில் செல்பி எடுத்துக் கொண்டும் வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது குருபூஜை விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் இந்த விழாவிற்கு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வழியாக மதுரை-ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மற்றும் தனியார் வாகனங்களில் பசும்பொன் சென்ற இளைஞர்கள் வாகனங்களின் மேற்கூரை மீது ஏறிக்கொண்டும் சன்னல் படிகளில் தொங்கிக் கொண்டும் கோசம் போட்டுக்கொண்டு மொபைல் போன்களின் மூலம் வீடியோ எடுத்துக் கொண்டு கத்திக்கொண்டே ஆபத்தான பயணங்கள் மேற்கொண்டனர்.

இது போன்று போக்குவரத்து விதிகளை மீறி சென்ற வாகனங்கள் மீதும் இளைஞர்கள் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்