மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்: 57 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் 57 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

Update: 2021-03-06 14:46 GMT
புதுடெல்லி,

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் திரிணமுல், காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி, பாஜக என மும்முனைப் போட்டி நிலவும் நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் 57 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது. இதில் நந்திகிராம் தொகுதியில் முன்னாள் மந்திரியும், சமீபத்தில் பாஜகவில் இணைந்தவருமான சுவேந்து அதிகாரி திரிணமுல் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

முன்னதாக 291 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியலை திரிணமுல் காங்கிரஸ் தலைவரும் முதல்-மந்திரியுமான மம்தா பானா்ஜி நேற்று வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது தொகுதியான நந்திகிராமில் போட்டியிட சுவேந்து அதிகாரி விடுத்த சவாலை ஏற்று மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.

மேலும் செய்திகள்