எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த மதுரை வீரன் படத்தை யாராலும் மறக்க முடியாது-மதுரை பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி

மதுரை வீரன் எனும் பெயரில் எம்ஜிஆர் நடித்த படத்தை யாரால் மறக்க முடியும்? என மதுரை பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.

Update: 2021-04-02 07:15 GMT
மதுரை 

மதுரையில் நடைபெற்று வரும் தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் பிரசார கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

பிரசார கூட்டத்தில் பேசிய துணை முதல்-அமைச்சர் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடைபெறுகிற தேர்தல் என கூறினார்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது

கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை காப்பாற்றுபவர் பிரதமர் மோடி. நாட்டு மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட தலைவர் பிரதமர் மோடி உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை பறைசாற்றியவர் பிரதமர் மோடி. உலகமே வியக்கும் அளவுக்கு கொரோனா தடுப்பூசியை  வழங்கிய பெருமை பிரதமர் மோடியையே சாரும். ஒரே ஆண்டி கொரோனா தடுப்பூசியை கொண்டுவந்தவர் மோடி என கூறினார்.

வெற்றிவேல் வீர வேல் எல்லோரும் நன்றாக இருக்கிறீர்களா? என தமிழில் பொதுமக்களிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி  தொடர்ந்து பேசி அவர்  பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த மதுரை வீரன் படத்தை யாராலும் மறக்க முடியாது. உலகத்தின் தொன்மை மொழியான தமிழை, சங்கம் வைத்து வளர்த்தது மதுரை . மறைந்த தென் மாவட்ட தலைவர்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன். தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தை பறைசாற்றும் இடமாக மதுரை திகழ்கிறது.

அனைத்து கிராமங்களுக்கும் இணையதள சேவை கொண்டு வர மத்திய அரசு திட்டம். 2024ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர் வழங்க திட்டம்.

தமிழகத்தில் சுமார் 16 லட்சம் வீடுகளுக்கு குழாய்மூலம் வீடுகளுக்கு நேரடியாக தண்ணீர் வ்ழங்கும் திட்டம் நிறைவேறி உள்ளது.

தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன தமிழகத்தில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் தருகிறது. சாலை போக்குவரத்து, ரெயில்வே கட்டுமானம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என கூறினார்.

மேலும் செய்திகள்