அ.தி.மு.க.வினர் சாலை மறியல்

வத்தலக்குண்டுவில் அ.தி.மு.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-04-06 21:57 GMT
வத்தலக்குண்டு: 

வத்தலக்குண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி அருகே வாக்கு சேகரிப்பதில் அ.தி.மு.க.வை சேர்ந்த  குமரேசன், தி.மு.க.வை சேர்ந்த ரவி என்ற இருளப்பன் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

 இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் அவர்கள் தனித்தனியே புகார் அளித்தனர். 

அதைத்தொடர்ந்து 2 பேரும் வத்தலக்குண்டு போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர். 

இந்நிலையில் நேற்று மாலை ரவி மற்றும் அவரது உறவினர்கள் சிலர், குமரேசன் வீட்டிற்கு சென்றனர். 

அங்கு இருந்த பெண்களிடம் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. 

இதனை கண்டித்து அ.தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவர் மோகன், ஒன்றிய செயலாளர் பாண்டியன், நகர செயலாளர் பீர்முகமது, குமரேசன் மற்றும் அவருடைய உறவினர்கள் வத்தலக்குண்டு பஸ் நிலையம் முன்பு நேற்றிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தகவலறிந்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து அ.தி.மு.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 அப்போது குமரேசன் வீட்டுக்கு வந்து தகராறு செய்த தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.

 இதையடுத்து மறியலை கைவிட்டு அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்