கார் மீது சிறிய வகை விமானம் மோதி விபத்து... இருவர் உயிரிழப்பு

இந்த விபத்தில் விமானமும் காரும் தீப்பிடித்து எரிந்தது.;

Update:2024-01-28 21:30 IST

கோப்புப்படம் 

பிரஸ்ஸல்ஸ்,

கிழக்கு பெல்ஜியத்தில் உள்ள ஏரோட்ரோமில் இலகுரக விமானம் ஒன்று வானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

எனினும், விமானத்தை தரையிறக்க விமானி முயற்சி செய்தும் பலனளிக்காமல் சாலையோரம் நின்றுகொண்டிருந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் விமானமும் காரும் தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த இருவரும் உயிரிழந்தனர். காரில் இருந்தவர், சிகெரட் புகைப்பதற்காக காரை விட்டு இறங்கிய சமயத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததால், நல்வாய்ப்பாக அவர் உயிர்பிழைத்தார். இந்த விபத்து தொடர்பாகவும், விமானத்தில் பயணம் செய்தவர்கள் யார் என்பது குறித்தும் அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்