சீனாவில் பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை

சீனாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்படனர்.

Update: 2016-12-29 05:45 GMT
பெய்ஜிங்,

சீனாவின் ஜிங்ஜியாங் மாகாணத்தில் உள்ள கம்யூனிஸ் கட்சி அலுவலகத்தில் தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகளை அந்நாட்டு காவல்துறை சுட்டுக்கொலை செய்தது. 

ஜிங்ஜியாங் மாகாணத்தில் உள்ள கராகஸ் கவுண்டியில்  உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த அலுவலகத்தை நோக்கி வந்த கார் அலுவலக கட்டிடத்தில் மோதியது. தொடர்ந்து வெடிகுண்டுகளையும் வெடிக்கச்செய்தனர். இந்த தாக்குதலில் ஒருவர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர். 

இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசார் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் தாக்குதல் நடத்த வந்த 4 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  சீனாவில் கடந்த சில மாதங்களில் நடத்தப்படும் மிகப்பெரும் தாக்குதல் இதுவாகும். சீனாவில் இதுபோன்ற நடத்தப்படும் தாக்குதலுக்கு கிழக்கு துருகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பை இத்தகைய தாக்குதலுக்கு வழக்கமாக குற்றம் சாட்டி வருகிறது. 

கடந்த செப்டம்பரில் கிர்கிஸ்தானில் உள்ள  சீனா தூதரகத்தில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலுக்கு இந்த பயங்கரவாத அமைப்பு மீதுதான் குற்றம் சுமத்தப்பட்டது.

மேலும் செய்திகள்