ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: 21 பேர் பலி 40 பேர் காயம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பில் 21 பேர் பலியாகி உள்ளதாகவும் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2017-01-10 14:15 GMT
காபூல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பில் 21 பேர் பலியாகி உள்ளதாகவும் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் தலைநர் காபூலில் அமெரிக்கா பல்கலைகழகம் அருகிலும்,நூர் மருத்துவமனை அருகிலும் திடீரென குண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டு சம்பவம் தற்கொலை படை ஒருவரால் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 21 பேர் பலியாகி உள்ளதாகவும், 40 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. 

பலியானவர்களில் பொதுமக்கள் மற்றும் அந்நாட்டு ராணுவ வீரர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து அந்நாட்டு உள்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலை ஜபிகுல்லா முஜாஹித் பயங்கரவாதத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்