அமெரிக்காவில் விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இந்தியர் கைது

அமெரிக்காவில் வடக்கு டகோடா மாகாணத்தில் வசித்து வருபவர் பரமன் ராதாகி‌ஷன் (வயது 53). இந்தியாவை சேர்ந்வர்.

Update: 2017-01-29 22:40 GMT

வாஷிங்டன்

அமெரிக்காவில் வடக்கு டகோடா மாகாணத்தில் வசித்து வருபவர் பரமன் ராதாகி‌ஷன் (வயது 53). இந்தியாவை சேர்ந்த இவர், மின்னபோலீஸ் நகருக்கு விமானத்தில் செல்வதற்காக, கிராண்ட் போர்க்ஸ் சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றார்.

அங்கிருந்த பயண ஏஜெண்டிடம், தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக ராதாகி‌ஷன் கூறினார். இதை போலீசாரிடம் ஏஜெண்டு தெரிவித்தார். இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் விரைந்து வந்தனர். ராதாகி‌ஷனை கைது செய்தனர்.

விமான நிலையத்தில் விமானங்களின் இயக்கம் நிறுத்திவைக்கப்பட்டது. வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. இருப்பினும், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பரமன் ராதாகி‌ஷன் மீது பயங்கரவாத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விமான நிலைய ஊழியர்களிடம் அதிருப்தி அடைந்து, அவர் இந்த மிரட்டலை விடுத்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்