உலகைச்சுற்றி

சவுதி அரேபியாவின் துணை இளவரசர் பின் சல்மான் அரசுமுறை பயணமாக நேற்று அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார்.

Update: 2017-03-13 19:17 GMT
* மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமானநிலையத்தில் 2 பெண்களால் கொடிய ரசாயன ஆயுதத்தின் மூலம் படுகொலை செய்யப்பட்ட நபர் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அண்ணன் கிம் ஜாங் நாம் என்பதை மலேசிய அரசு உறுதி செய்துவிட்டது. அவரின் உடலை 2 அல்லது 3 வாரங்களுக்குள் பெற வேண்டும் என அவரது உறவினர்களுக்கு மலேசியா கெடு விதித்து உள்ளது.

* சவுதி அரேபியாவின் துணை இளவரசர் பின் சல்மான் அரசுமுறை பயணமாக நேற்று அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவர் ஜனாதிபதி டிரம்பை நேரில் சந்தித்து, இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

* அர்ஜென்டினாவின் ஒலவர்ரியா நகரில் உள்ள ஒரு திறந்தவெளி மைதானத்தில் புகழ்பெற்ற ராப் பாடகர் இன்டியோ சோலாரியின் இசைக்கச்சேரி நடந்தது. இதையொட்டி அங்கு சுமார் 2,50,000 ரசிகர்கள் திரண்டிருந்தனர். கூட்டத்தில் இருந்த ரசிகர்கள் சிலர் மேடையை நோக்கி செல்ல முற்பட்டதால் அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் 2 பேர் மூச்சு திணறி உயிரிழந்தனர்.

* சீனாவில் நேற்று நடைபெற்ற வருடாந்திர பாராளுமன்ற கூட்டத்தின் போது அதிபர் ஜின்பிங் ராணுவ பிரதிநிதிகளை சந்தித்து பேசினார். அப்போது அவர் ராணுவப்படையில் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை புகுத்தி, திறன்மிக்க போர்விமானங்கள், செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணைகள், அதிநவீன சக்தி கொண்ட நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளிட்டவற்றை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் செய்திகள்