காஷ்மீர் எல்லையில் துப்பாக்கி சூடு: இந்திய துணைத் தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம்

காஷ்மீர் எல்லையில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இந்திய துணைத் தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2017-03-20 11:58 GMT

இஸ்லாமாபாத்,

காஷ்மீர் மாநிலத்தில் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே இருந்து கடந்த 17-ந் தேதி இந்திய ராணுவம் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் தங்கள் பகுதியில் உள்ள கோட்லி என்ற இடத்தில் 60 வயது பெண் உயிர் இழந்ததாகவும், மேலும் 3 பேர் காயம் அடைந்ததாகவும் பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது.

இது தொடர்பாக, தெற்கு ஆசியா மற்றும் சார்க் நாடுகளின் விவகாரங்களை கவனிக்கும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக இயக்குனர் ஜெனரல் முகமது பைசல் இன்று  இஸ்லாமாபாத் நகரில் உள்ள இந்திய துணைத் தூதர் ஜே.பி.சிங்கை அழைத்து பாகிஸ்தான் அரசின் கண்டனத்தை தெரிவித்தார்.

மேலும் செய்திகள்