ஈராக் மொசூலில் அமெரிக்க குண்டுவீச்சில் பொதுமக்கள் 200 பேர் உயிரிழப்பு

ஈராக் மொசூல் நகரில் அமெரிக்கா நடத்திய குண்டு வீச்சில் பொதுமக்கள் 200 பேர் உயிரிழந்தனர்.

Update: 2017-03-26 06:29 GMT
மொசூல்

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசம் இருக்கும் மொசூல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை மீட்கும் நடவடிக்கையில் ராணுவம்  தீவிரமாக உள்ளது. இதற்கு அமெரிக்க கூட்டுப்படைகள் ஆதரவாக உள்ளனர். கடந்த 17-ந்தேதி மொசூல் நகரின் மீது அமெரிக்கா போர்  விமானங்கள் குண்டு வீசி தாக்கியது. ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அதில் பயங்கரவாதிகளுக்கு பதிலாக 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகி உள்ளனர். அங்கிருந்த நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகி கிடக்கின்றன.

மேற்கு மொசூல் அருகே உள்ள அகவாத் ஜகிதா என்ற இடத்தில் இக்கொடூரம் நடந்துள்ளது. அங்கு இடிபாடுகளில் இருந்து பிணங்கள் குவியல் குவியலாக தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். கர்ப்பிணி பெண்களும், பிறந்த குழந்தைகளின் பிணங்களும் மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளில் இருந்து இன்னும் பிணங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. மொசூல் நகர குண்டு வீச்சில் 200-க்கும் மேற்பட்டோர் பலியானதை அமெரிக்கா ஏற்றுக் கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்