வங்காளதேசத்தில் தலைவர் உட்பட மூன்று தீவிரவாதிகளுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றம்

ஹூஜி எனப்படும் ஹர்கத்-அல்-ஜிகாதி-அல் இஸ்லாமி எனப்படும் இஸ்லாமிய மத அடிப்படை வாத அமைப்பின் தலைவரும் அவரது இரு கூட்டாளிகளுக்கும் வங்காள தேசத்தில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Update: 2017-04-12 17:46 GMT
டாக்கா

ஹூஜி எனப்படும் ஹர்கத்-அல்-ஜிகாதி-அல் இஸ்லாமி எனப்படும் இஸ்லாமிய மத அடிப்படை வாத அமைப்பின் தலைவரும் அவரது இரு கூட்டாளிகளுக்கும் வங்காள தேசத்தில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

முஃப்தி அப்துல் ஹன்னான் எனும் ஹூஜி அமைப்பின் தலைவருக்கும் அவரது இரு கூட்டளிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக இவர்கள் மீது நடந்த விசாரணைக்குப் பிறகு 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. தாக்குதலில் மூன்று காவலர்கள் இறந்தனர். சவுத்ரி சிறு காயங்களுடன் தப்பினார். சுமார் 70 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். சவுத்ரி சில்ஹட் எனுமிடத்தில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் எனும் துறவியின் பெயரிலுள்ள தர்காவிற்கு விஜயம் செய்தப் போது தாக்குதலுக்கு உள்ளானார். கடந்த வாரம் அதிபர் அப்துல் ஹமீது மூவரது கருணை மனுக்களை நிராகரித்ததால் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அவர்களது தாக்குதல் அன்றைய பிரிட்டிஷ் தூதர் அனவர் சவுத்ரியை குறிவைத்து நடத்தப்பட்டது. சவுத்ரி வங்காள தேசத்தில் பிறந்தவராவார். மார்ச் 19 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் அவர்களது தண்டனையை மீண்டும் உறுதி செய்தது. ஹன்னான் உட்பட இதர 7 முக்கிய தீவிரவாதிகள் மீது 2001 ஆம் ஆண்டில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பாக தூக்குததண்டனை விதிக்கப்பட்டது. இத்தாக்குதலில் 10 பேர் இறந்தனர்.

ஹூஜி எனும் இந்த அமைப்பு ஆப்கானிஸ்தானில் போரிட்டு வந்த தீவிரவாதக்குழுக்களின் பாணியில் வங்காளதேசத்தில் 1992 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு நிகழ்விலும் இந்திய அரசு இந்த அமைப்பு மீது அய்யம் கொண்டுள்ளது. 

முன்னதாக ஹன்னானின் குடும்பத்தினர் அவரை நேரில் சந்தித்து உரையாடினர். 

மேலும் செய்திகள்