25 ஆண்டுகளாக மரம் இலைகளை சாப்பிட்டு வாழும் முதியவர், உடல்நிலை பாதிப்பே கிடையாதாம்!

பாகிஸ்தானில் 25 ஆண்டுகளாக மரம்-இலைகளை சாப்பிட்டு வாழும் முதியவர் உடல்நிலை பாதிப்பு என்பத சந்தித்ததே கிடையாதாம்.

Update: 2017-04-23 05:03 GMT
லாகூர், 

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் குஜ்ரன்வாலா மாவட்டத்தை சேர்ந்த மெக்மூத் பத்(50) வழக்கமான உணவு வகைகளை சாப்பிடுவதில்லை. மாறாக மரங்கள் மற்றும் இலை தழைகளை சாப்பிட்டு உயிர் வாழ்கிறார். கடந்த 25 ஆண்டுகளாக இப்பழக்கத்தை கடை பிடித்து வருகிறார். இவர் கழுதை வண்டியில் பாரம் ஏற்றி பணம் சம்பாதித்து வருகிறார். இருந்தும் விதம் விதமான உணவு பண்டங்கள் மீது அவருக்கு நாட்டம் இல்லை. இது குறித்து மெக்மூத் பத் பேசுகையில், 25 வயதில் நான் வறுமையில் வாடினேன். வேலை எதுவும் கிடைக்க வில்லை. எனவே சாப்பிட வழியின்றி பட்டினி கிடந்தேன். எனக்கு பிச்சை எடுக்க விருப்பம் இல்லை. 

எனவே பசுமையான மரங்கள் மற்றும் இலை தழைகளை தின்று பசி ஆறினேன். அதுவே எனக்கு பழக்கமாகி விட்டது. தற்போது கழுதை வண்டி மூலம் பாரம் ஏற்றி தினமும் ரூ-. 600 வரை சம்பாதிக்கிறேன். இருந்தும் சாப்பாடு மீது எனக்கு விருப்பம் இல்லை. பசி எடுக்கும் போது இலை தழைகளை சாப்பிட்டு உயிர் வாழ் கிறேன்” என்றார்.

மரம் மற்றும் இலைகளை சாப்பிட்டாலும் இவரை நோய்கள் தாக்கியது இல்லை. இதனால் அவர் இதுவரை டாக்டரிடம் சென்று மருத்துவம் பார்த்ததில்லை. இது அவரது அண்டை வீட்டினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கழுதை வண்டி மூலம் பாரம் ஏற்றி சாலையில் செல்லும் போது பசித்தால் அவர் உணவகம் செல்வது கிடையாதாம், சாலை ஓரத்தில் எப்போது வேண்டுமானாலும் நின்று இலை தழைகளை சாப்பிட தொடங்கி விடுவார். பசுமையான மரம் மற்றும் இலைகளை சாப்பிடும் அவர் அப்பகுதியில் மிகவும் பிரபலமாகி உள்ளார். 
 

மேலும் செய்திகள்