ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் ஒரு மாவட்டத்தை கைப்பற்றினர்

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிற தலீபான் பயங்கரவாதிகளை ஒடுக்க உள்நாட்டுப் படைகளுடன்

Update: 2017-05-06 22:30 GMT
குண்டூஸ்,

 அமெரிக்க கூட்டுப்படைகள் பக்க பலமாக இருந்து தாக்குதல்கள் நடத்துகின்றன. ஆனாலும் தலீபான்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலைதான் தொடருகிறது.

அங்கு குண்டூஸ் மாகாணத்தில் காலா இ ஜால் மாவட்டத்தை கைப்பற்றுவதற்கு கடந்த 2 நாட்களாக தலீபான் பயங்கரவாதிகள் கடுமையான சண்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த சண்டையின் முடிவில் நேற்று காலை காலா இ ஜால் மாவட்டத்தை தலீபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி, தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர்.

இந்த சண்டையின் காரணமாக அங்கு வசித்து வந்த ஏராளமான குடும்பங்கள் இடம் பெயர்ந்து விட்டன.

காலா இ ஜால் மாவட்டத்தை கைப்பற்றி விட்டதை தலீபான் இயக்க செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாஹித் உறுதி செய்துள்ளார். ஆனால் துணை போலீஸ் அதிகாரி கர்னல் சபார் முகமது, தலீபான்கள் கூற்றை மறுப்பதுடன் சண்டை தொடர்பாக கூறி உள்ளார்.

இதற்கிடையே ஹெல்மாண்ட் மாகாணத்தில் உள்ள சோதனை சாவடி ஒன்றின்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். இதை மாகாண போலீஸ் தலைவர் மேஜர் ஜெனரல் அகா நூர் கெண்டூஸ் செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்