பாகிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்த பேராசிரியர் கைது

பாகிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்த பேராசிரியரை அந்நாட்டு பாதுகாப்பு படை கைது செய்துள்ளது.

Update: 2017-05-23 12:26 GMT
லாகூர்,

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அந்நாட்டில் புகழ்பெற்ற லாகூர் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த லாகூர் பல்கலைக்கழகத்தில்தான் மும்பை தாக்குதலுக்கு சூத்திரதாரியாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் பயிற்று வித்ததாக கூறப்படுகிறது.

 இந்த நிலையில்,பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் பேராசிரியராக பணியாற்றி வந்த ஒருவரை அந்நாட்டு பயங்கரவாத எதிர்ப்பு படை அதிரடியாக கைது செய்துள்ளது. மேலும், பேராசிரியரின் உறவினர் ஒருவர் உட்பட நான்கு  பேரை பயங்கரவாத எதிர்ப்பு படை கைது செய்துள்ளது. 

கைது செய்யப்பட்ட அனைவரும் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் பாகிஸ்தானில் மக்கள் கூடும் இடங்களில் ஆளில்லா விமானங்கள் மூலம் பத்திரிகையாளர் என்ற போர்வையில் தாக்குதல் நிகழ்த்த சதித்திட்டம் தீட்டியிருந்ததாகவும் பயங்கரவாத எதிர்ப்பு படை  தெரிவித்துள்ளது.

சிரியாவில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் மின்னஞ்சல் மூலம் பேராசிரியர் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பாகிஸ்தானில் உள்ள கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் வரைபடமும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்